Jul 21, 2009

பிடித்தவை - பாரதி வரிகள்...!!!


காணி நிலம் வேண்டும்...!


காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்காணி

நிலத்தினிடையே - ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மிளநீரும்.



பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே

வந்துகாதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே - அம்மா!நின்றன்

காவலுற வேணும், - என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தை

பாலித்திட வேணும்.




ரசித்தவை...!!!

வறுமை...

அரிசி... ஆடை கழற்றிய நெல்.
அதனால் தான் குடிசைக்கு
வர கூச்சப்படுகிறதோ...???...!!!